தங்கைக்கு பாலியல் தொல்லை : சிறையில் அக்காவும், அக்கா கணவரும்..!

தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை கொலை செய்த அக்கா மற்றும் அவரின் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடலூர் பாதிரிக்குப்பம் சுந்தரமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரசாத். இவருக்கு வயது 40, இருப்பினும் திருமணமாகாதவர்.

தங்கைக்கு பாலியல் தொந்தரவு

இவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கவிப்பிரியா என்பவரின் தங்கைக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கவிப்பிரியாவும் அவரது கணவர் முத்துவும் பிரசாந்தை எச்சரித்துள்ளனர். இதனால் இழு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில், மனைவி கவிப்பிரியாவும், அவரது கணவர் முத்துவும் சேர்ந்து பிரசாந்தை கத்தியால் கழுத்தறிந்து கொலை செய்துள்ளனர்.

கணவருக்கும், மனைவிக்கும் சிறை:

அதன்பிறகு, கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இருவரும் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Posts

ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்த இயக்குநர்,மனைவி: இரட்டைக் கொலை செய்தது மகனா?

அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர், அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ஆகியோர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் இயக்குநரும், நடிகருமான ராப் ரெய்னர்(78) மற்றும் அவரது மனைவி மைக்கேல் சிங்கர்…

‘அன்புமணி பணமோசடி செய்கிறார்’:டிஜிபியிடம் ராமதாஸ் பகீர் புகார்!

விருப்ப மனு என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி பணமோசடியில் ஈடுபடுவதாக சென்னை டிஜிபி, அலுவலகத்தில் மின்னஞ்சல் வாயிலாக டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *