விஜய்யை பாஜக தான் இயக்குகிறது- சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

தமிழ்நாடு முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசும்போதே விஜய்யை பாஜக தான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை…

சிவகங்கை அரசு விடுதியில் கட்டாய மதமாற்றம்- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சிவகங்கை மாவட்டம், காளையர்கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில் உள்ள மாணவிகளை மதமாற்றம் செய்யும் விடுதி காப்பாளரை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர்…

ஓசூர் அருகே பயங்கரம்- நாய் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் பலி

ஓசூர் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது வடமாநில சிறுவனை தெருநாய் கடித்ததில் பரிதாபமாக  உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த மாசிநாயக்கனப்பள்ளியில் உள்ள பசுமைகுடில் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குடும்பங்களுடன் தங்கி வேலை…

பறவைகள் சரணாலயத்தில் டாஸ்மாக் கடையா?- டாக்டர் அன்புமணி கண்டனம்

பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் விதிகளை மீறி டாஸ்மாக் கடை அமைப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரிக்கு அருகில் உள்ள பழவேற்காடு…

பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம். வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய…

அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக்கொலை- உடலை மீட்டுத்தர தந்தை வேண்டுகோள்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி உதவிடுமாறு அவரின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன்(30). இவர் கடந்த 2016-ம் ஆண்டு புளோரிடா கல்லூரியில் முதுகலை…

இன்று கொட்டப்போகிறது கனமழை- தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 19) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல்…

யார் பொறுப்பு?… தவெக தலைவர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

தொண்டர்கள் உயரமான இடங்களில் ஏறி கீழே விழுந்தால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களைக் கட்சித் தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா என்று தவெக தலைவர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்…

வைகை அணையில் இருந்து ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் ஒரு போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து இன்று (செப்டம்பர் 18)  தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து பெரியாறு பாசனப்பகுதியில் ஒரு போக பாசன பரப்பாகிய 85 ஆயிரத்து 563…

மூச்சுத்திணறும் காஸா விவகாரத்தில் மவுனமாக இருப்பது சரியல்ல- மு.க.ஸ்டாலின் வேதனை!

காஸாவில் நடக்கும் சம்பவங்களால், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதி, “காஸா மூச்சுத் திணறுகிறது, உலகம் விலகி…