விக்கிரவாண்டி அருகே மூணாறுக்குச் சுற்றுலா சென்ற கார் சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே மூணாறுக்குச் சுற்றுலா சென்ற கார் இன்று அதிகாலை, சென்டர் மீடியனில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் கார் உடனே தீப்பிடித்து எரிந்தது. அப்போது, காரில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்த சம்சுதீன், கொளத்தூரைச் சேர்ந்த ரிஷி, ஆவடி மோகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், காயமடைந்த அப்துல் அஜீஸ், தீபக் ஆகிய இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் இருந்து இவர்கள், மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. அத்துடன் கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


