ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்த இயக்குநர்,மனைவி: இரட்டைக் கொலை செய்தது மகனா?

அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர், அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ஆகியோர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குநரும், நடிகருமான ராப் ரெய்னர்(78) மற்றும் அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ரெய்னர்(68) ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸின் பிரெண்ட்வுட்டில் உள்ள வீட்டில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று ராப், மைக்கேல் சிங்கர் ஆகியோரின் உடல்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த 1971-ம் ஆண்டு நடிகராக திரையுலக வாழ்க்கையை தொடங்கிய ராப் ரெய்னர் பின்பு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் ஜொலித்தார். திஸ் இஸ் ஸ்பைனல் டேப், தி பிரின்சஸ் பிரைட் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். சிறந்த இயக்குநருக்கான கோல்டப் குளோப் விருதை 4 முறை வென்றுள்ளார். அவரும், அவரது மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது ஹாலிவுட் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராப் மற்றும் மைக்கேல் ஆகியோரை கொலை செய்தது அவர்களது மகன் நிக்(32) என்ற தகவல் கிடைத்துள்ளது. அவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Posts

‘போட்டோ ஷூட்-னு வந்துட்டா நாங்க வேற மாதிரி’ – நடிகை பளீச் போஸ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட என பல மொழிப் படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். இவர் படத்திற்கு தந்தாற்போல், நல்ல கேரக்டர்கள் அமையும் போது தன் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக சினிமா வட்டாரத்தில்…

‘அன்புமணி பணமோசடி செய்கிறார்’:டிஜிபியிடம் ராமதாஸ் பகீர் புகார்!

விருப்ப மனு என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி பணமோசடியில் ஈடுபடுவதாக சென்னை டிஜிபி, அலுவலகத்தில் மின்னஞ்சல் வாயிலாக டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *