உத்தராகண்டில் அதிகாலையில் மேக வெடிப்பு- இடிபாடுகளில் சிக்கி பலர் மாயம்
உத்தராகண்டில் சமோலி மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேகவெடிப்பில் பல வீடுகள், வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தன. இதில் பலர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் உள்ள தாராலி என்ற பகுதியில் இன்று அதிகாலை திடீரென மேக…
நியூயார்க்கில் பயங்கர விபத்து – பேருந்து கவிழ்ந்து 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு
நயாகரா நீர்வீழ்ச்சியை ரசித்து விட்டு நியூயார்க் திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் பேருந்து கவிழ்ந்து 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்கா. கனடா எல்லையில் உள்ள உயரமான நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகைக் காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்…
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றின் வேகமாற்றம் காரணமாக, பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் பல…
திருச்செந்தூர் ஆவணித் திருவிழா தேரோட்டம்: நாளை கோலாகலம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை(ஆகஸ்ட் 23) ஆவணித் திருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 12 நாட்கள்…
பெண்களை மட்டம் தட்டும் திமுக அமைச்சர்கள்- நயினார் நாகேந்திரன் கண்டனம்
பெண்களை நாகரிகமற்ற முறையில் கிண்டல் செய்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனிப்பட்ட முறையில் தமிழக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்,…
பரபரப்பு… நெல்லையில் அமித்ஷாவுக்கு எதிராக போஸ்டர்!
திருநெல்வேலிக்கு (நெல்லை) இன்று வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பாஜக. சார்பில் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய…
ஆட்சியைப் பிடித்து விடலாம் என கனவு காணாதீங்க விஜய்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாய்ச்சல்
கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு என்று தவெக தலைவர் விஜய்யை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த…
அடேயப்பா… திருப்பதியில் ஒரே நாளில் 4.86 லட்சம் லட்டுகள் விற்று சாதனை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 4.86 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அத்துடன் வெளிநாட்டு பக்தர்களும் திருப்பதி ஏழுமலையானை வழிபட…
சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு- மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகின் மிக முதன்மையான நகரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மாநகருக்கு இன்று வயது 386. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 அன்று சென்னை நகரத்தின் நிறுவன நாளைக்…
பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர் மாநாடு- நெல்லைக்கு அமித்ஷா இன்று விசிட்
நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெறும் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, தேர்தல் வியூகங்களை அமைப்பதற்காக நெல்லையில் பூத்…