‘ப்ளூ ஸ்டார்’ படத்திற்காக கனடா சர்வதேச விருது… நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி

கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ‘ப்ளூ ஸ்டார்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சாந்தனு பெற்றுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. உள்ளூர் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு சாதிப்பாகுபாடு குறித்து அழுத்தமாக பேசிய இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் கனடா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ப்ளூ ஸ்டார்’ சிறந்த திரைப்படம் என்ற விருதை, வென்றது. அதே போன்று நடிகர் சாந்தனு சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவரது முதல் சர்வதேச விருதாகும்.

இதுகுறித்து சாந்தனு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘ப்ளூ ஸ்டார்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் எனக்கு ஒரு கதாபாத்திரத்தை விட அதிகமாக கொடுத்தது. இது எனக்கு வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் நினைவுகள், பாடங்கள் மற்றும் அன்பைக் கொடுத்தது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றி பீம்ஜி அண்ணா மற்றும் இயக்குநர், என்னை நம்பியவர்கள், என் சக நடிகர்கள் மிகவும் அன்பானவர்கள். தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவின் ஒவ்வொரு நபருக்கும். மிக முக்கியமாக, எனது பயணத்தை ஆதரித்த எனது அன்பான பார்வையாளர்களுக்கு… இது உங்கள் அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

நடிகர் அபினய் காலமானார்… சோகத்தில் முடிந்த சாக்லேட் பாயின் வாழ்க்கை!

சென்னையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபினய் இன்று காலமானார் அவருக்கு வயது 44. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் அபினய். அதனைத்தொடர்ந்து ஓரிரு படங்களிலும் நடித்தார். விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில்…

வெள்ளை சட்டையில், மாஸ் லுக்’கில் ‘அரசன்’ : நடிகர் சிம்பு டிரெண்டிங்

வெள்ளைச் சட்டையில், படு மாஸ் லுக்’கில் தான் நிற்கும் புகைப்படங்களை, நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நடிகர் சிம்புவின், இந்த மாஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அரசன் ப்ரோமோ கலைப்புலி எஸ்.தாணு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *