
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வீட்டிற்குள் மர்மநபர் திடீரென புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யின் பங்களா, சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ளது. இந்த பங்களாவிற்குள் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென உள்ளே நுழைந்தவர், மொட்டை மாடிக்குச் சென்று பதுங்கிக் கொண்டார். விஜய் வீட்டில் உள்ள பாதுகாவலர்கள், அந்த மர்ம நபரை தேடினர். கடைசியில் அவர் மொட்டை மாடியில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது.
அவரைப் பிடித்து அவர்கள் போலீஸார் வசம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண்(24) என்பவது தெரிய வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக அவர் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மனநல காப்பகத்தில் அருண் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.