
சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக முதன்மையான நகரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மாநகருக்கு இன்று வயது 386. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 அன்று சென்னை நகரத்தின் நிறுவன நாளைக் கொண்டாடப்படுகிறது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி சென்னைப் பகுதியில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவியது, இது சென்னையின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில், சென்னையின் பாரம்பரியம், கலாசாரம், மற்றும் வரலாற்றைப் போற்றும் வகையில் பல நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், நடைபயணங்கள், மற்றும் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.
சென்னை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ”
எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து,
வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து,
பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து,
எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,
சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து,
மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386 என்று குறிப்பிட்டுள்ளார்.