எனது தந்தை தர்மேந்திரா நலமுடன் உள்ளார்… நடிகை ஈஷா தியோல் விளக்கம்

பாலிவுட் திரையுலகின் பழம் பெரும் நடிகர் தர்மேந்திரா இன்று காலமானார் என்ற செய்தியை அவரது மகள் நடிகை ஈஷா தியோல் மறுத்துள்ளார்.

இந்திய திரையுலகில் பிரபல நடிகராக விளங்கியவர் தர்மேந்திரா. இவர் ‘ஆயி மிலன் கி பேலா’, ‘ஃபூல் அவுர் பத்தர்’, ‘ஆயே தின் பஹார் கே’, ‘சீதா அவுர் கீதா’, ‘ராஜா ஜானி’, ‘ஜுக்னு’, ‘யாதோன் கி பாராத்’, ‘தோஸ்த்’, ‘ஷோலே’, ‘பிரதிக்ஞா’, ‘சரஸ்’, ‘தரம் வீர்’ உள்பட 300-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்தார்.

வயது மூப்பு காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தர்மேந்திரா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற தகவல் பரவியது. ஆனால், தனது தந்தை நலமுடன் இருப்பதாக தர்மேந்திராவின் மகள் நடிகை ஈஷா தியோல் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts

இந்திய தேர்தல் ஆணையத்திடம் முதல் கட்சியாக முந்திக் கொண்ட தவெக!

சட்டமன்ற தேர்தலுக்காக பொதுச்சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று (நவம்பர் 11)…

“கடற்கரை ஓரம் – வெள்ளை சேலையில் விஜய் டிவி சீரியல் நடிகை கிளாமர் போட்டோ ஷூட்”

சன் டிவியில் ஒளிபரப்பான “எதிர்நீச்சல்” சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை தான் மதுமிதா. வடமாநில பெண்ணான இவர், தமிழ், கன்னடம் என இரு மொழி சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் “அய்யனார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *