ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவியேற்பு விழாவில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ” இந்தியாவுடன் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும். ரஷ்யாவின் கச்சா எண்ணெய் காரணமாக இந்தியாவின் மீதான வரிகள் அதிகமாக உள்ளன. எனவே, இந்தியாவுடன் மிகவும் வித்தியாசமான ஒப்பந்தம் செய்ய விரும்புகிறோம்.
அத்துடன் இந்தியா, அமெரிக்காவிற்கு இடையிலான உறவை மேம்படுத்த காத்திருக்கிறேன். மிக முக்கியமான சர்வதேச உறவுகளை செர்ஜியோ வலுப்படுத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம். எரிசக்தி ஏற்றுமதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை பாதுகாக்க உதவுவார். அமெரிக்க தொழில்கள், தொழில்நுட்பங்களில் முதலீடுகளை ஊக்குவிப்பார் “என்று தெரிவித்தார்.


