விஜய்யை பாஜக தான் இயக்குகிறது- சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
தமிழ்நாடு முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசும்போதே விஜய்யை பாஜக தான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை…
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு…375 பொருட்கள் விலையை குறைக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம்!
இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலாகியுள்ளது. எனவே, ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், என்சிஹெச் செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஜிஎஸ்டி மறுசீரமைப்பு…
சிவகங்கை அரசு விடுதியில் கட்டாய மதமாற்றம்- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
சிவகங்கை மாவட்டம், காளையர்கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில் உள்ள மாணவிகளை மதமாற்றம் செய்யும் விடுதி காப்பாளரை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர்…
உள்நாட்டு பொருட்களையே வாங்க வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவில் 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம், இன்று முதல் நாடு…
ஆப்கானிஸ்தானில் ஒரு அங்குலம் கூட தர முடியாது- டிரம்பிற்கு தாலிபான்கள் பதிலடி!
ஆப்கானிஸ்தான் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தாலிபான்கள் பதிலடி கொடுத்துள்ளனர். சீனாவின் எல்லையில் ஆப்கானிஸ்தானின் பஹ்ராம் விமானப்படைத் தளம் உள்ளது. இதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்…
ஓசூர் அருகே பயங்கரம்- நாய் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் பலி
ஓசூர் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது வடமாநில சிறுவனை தெருநாய் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த மாசிநாயக்கனப்பள்ளியில் உள்ள பசுமைகுடில் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குடும்பங்களுடன் தங்கி வேலை…
காணாமல் போன சிறுமி கரும்பு வயலில் சடலமாக மீட்பு- கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை?
வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கரும்புத் தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது தந்தை புகார் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில,தியேரி மாவட்டம், பர்வா செம்ரா…
போதை ஏறிப்போச்சு…காவல்நிலையத்தில் நிர்வாணமாக வந்து தகராறு செய்த பெண்!
கணவர் தாக்கியதாக குடிபோதையில் காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்து இளம்பெண் அட்டூழியம் செய்த செயல் உத்தரப்பிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம் தாஜ் கஞ்ச் காவல் நிலையம் அப்படி ஒரு அதிர்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து இருக்காது.…
பறவைகள் சரணாலயத்தில் டாஸ்மாக் கடையா?- டாக்டர் அன்புமணி கண்டனம்
பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் விதிகளை மீறி டாஸ்மாக் கடை அமைப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரிக்கு அருகில் உள்ள பழவேற்காடு…
புதிய உச்சத்தில் தங்கம் விலை- இன்றைய நிலவரம் ரூ.82,320
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 20) சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 82,320 ரூபாயாக புதிய உச்சம் தொட்டுள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. உலக நாடுகள் இடையிலான போர்…