இமாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 15) அதிகாலை 1.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 31.39 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 77.24 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன, குறிப்பாக ஆகஸ்ட் 2025-ல் சம்பா மாவட்டத்தில் 3.3 மற்றும் 4.0 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதிவாகின, இது பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தியது, எனினும், எதிர்காலத்தில் 8.0 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என ஓர் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது, எனவே இப்பகுதி நிலநடுக்க அபாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


