மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்குகள் நீக்கம்: மம்தா தொகுதியில் எவ்வளவு தெரியுமா?

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) மூலம் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொகுதியில் 4 மடங்கு அதிக வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணி நவம்பர் 4-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது..

அதன்படி, பாஜக மாநில தலைவரும், மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் 10,599 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜியை பிரதிநிதித்துவப்படுத்தும் பவானிபூர் தொகுதியில், 44,787 வாக்குகள், அதாவது, நந்திகிராமை விட 4 மடங்கு அதிக வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வசம் உள்ள சௌரிங்கியில் 74,553 வாக்குகளும், கொல்கத்தா துறைமுக தொகுதியில் 63,730 வாக்குகளும் அதிகபட்சமாக நீக்கப்பட்டுள்ளன. திரிணமுல் காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 8,16,047 வாக்குகளுடன் நீக்கப்பட்டுள்ளன. இறப்புகள், வாக்காளர்கள் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்தல் மற்றும் போலி வாக்குகள் இருப்பது போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Posts

அதிகாலையில் இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

இமாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 15)  அதிகாலை 1.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகியுள்ளதாக…

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார். அவருக்கு வயது 91. மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகராட்சி தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய சிவராஜ் பாட்டீல், லத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *