பல தலைமுறைகளைக் கடந்த நடிப்பாற்றல்… நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி புகழாரம்!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தமிழில் வாழ்த்துசெய்தி வெளியிட்டுள்ளார். அதில்,” ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது. பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.

அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Posts

‘போட்டோ ஷூட்-னு வந்துட்டா நாங்க வேற மாதிரி’ – நடிகை பளீச் போஸ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட என பல மொழிப் படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். இவர் படத்திற்கு தந்தாற்போல், நல்ல கேரக்டர்கள் அமையும் போது தன் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக சினிமா வட்டாரத்தில்…

தமிழக பாஜகவிற்கு கேரளா வெற்றி தந்த உற்சாகம்: நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி

கேரளாவில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (டிசம்பர் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுர மாநகராட்சியை பாஜக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *