மதுரை மாவட்டம் உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்றார்.

முல்லை பெரியாறு – லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டுக் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதனைதொடர்ந்து, விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோக்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக வந்த முதல்வருக்கு பொதுமக்களும், திமுகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, மதுரை மாவட்டம் சிவகங்கை சாலை மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தடச் சாலை சந்திப்பு மேம்பாலத்திற்கு “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” என்று பெயர் சூட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


