மதுரையில் #TN_Rising முதலிட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் முக.ஸ்டாலின் பல்வேறு வேலை வாய்ப்புகளை பெருக்கும் வகையிலான பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

மதுரை விரகனூர் பகுதியில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கெட்டா அரங்கில், தொழில் முதலீட்டாளர் மாநாடு மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மதுரை எம்.பி சு.வெங்கடேசன், தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, மதுரை துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டின் நடந்த சிறப்புகள்:-
முதலமைச்சர் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து. மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 56,766 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள்.

மாஸ்டர் பிளான் :-
- மதுரை மாவட்டத்திற்கான மாஸ்டர் பிளான் வரைவு திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் முதன்மையாக சிறப்பு கவனம் கொடுத்து மாஸ்டர் பிளான் திட்டம். - நகர் பகுதி 147.97 சதுர கி.மீ. தொலைவுக்கு விரிவடைவதால் மதுரையை ஒட்டிய சிறுநகரங்கள், கிராமங்கள் வளர்ச்சி அடையும்.
- மதுரையில் தைவான் நிறுவனம் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதன் மூலம் 15,000 பெண்களுக்கு வேலை கிடைக்கும் என முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், மதுரை கோயில் நகராக இருந்தால் மட்டும் போதாது, தொழில் நகராகவும் வளர்ச்சி பெற வேண்டும் என்பது என் ஆசை, லட்சியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


