திருப்பதி கோயிலில் குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

நடிகர் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்திருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது 75-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்..ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இந்த நிலையில் ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts

கரூர் துயரச் சம்பவம்… தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.…

மீண்டும் ஒரு விஜய் டிவி சீரியல் நடிகை தற்கொலை – காரணம் என்ன..?

கணவர், மனைவிக்கும் இடையேயான சண்டையில் விஜய் டிவி சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சீரியல் நடிகை விஜய் டிவி சீரியல்களான “சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி” போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *