கணவர், மனைவிக்கும் இடையேயான சண்டையில் விஜய் டிவி சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியல்களான “சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி” போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஜேஸ்வரி. இவர் ஒரு சில படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

கணவர் – மனைவி சண்டை
சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் சீரியல் நடிகை ராஜேஸ்வரி. சில ஆண்டுகளுக்கு முன்பு சதிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் சதீஷ் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே சண்டைகள், தகராறுகள் ஏற்பட்டதாக தெரிகிறது.
தற்கொலை முயற்சி
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த நடிகை ராஜேஸ்வரி தனது தாயார் வசிக்கும் சென்னை சைதாப்பேட்டை வீட்டிற்கு கடந்த 7ஆம் தேதி சென்றுள்ளார். அங்கும் கடும் மன உளைச்சல் ஏற்படவே, நடிகை ராஜேஸ்வரி தனது தாயாரின் உயர் இரத்த அழுத்த(BP) மாத்திரையை அதிகமாக எடுத்துக் கொண்டுள்ளார்.
இதனால் மயக்கம் அடைந்த ராஜேஸ்வரியை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராஜேஸ்வரிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

தற்கொலை – போலீசார் விசாரணை
பிறகு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரிக்கும், அவரது கணவருக்கும் இடையே என்ன பிரச்னை? ராஜேஸ்வரிக்கு சீரியல் படப்பிடிப்பில் ஏதும் தொந்தரவா? இல்லை வெறும் ஏதும் உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஜய் டிவி நடிகை
சிறகடிக்க ஆசை சீரியல்
விஜய் தொலைக்காட்சியில். ஒளிப்பரப்பாகி வரும், “சிறகடிக்க ஆசை” சீரியலில் ராஜேஸ்வரி அருணின் அம்மாவாகவும், கதாநாயகி மீனாவின் தங்கை சீதாவின் மாமியாராகவும் நடித்துக் கொண்டிருந்தார். அவர் சிறகடிக்க ஆசை சீரியலில் மட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


