பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (டிசம்பர் 13) டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதில் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினமே சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், தமிழ்நாடு பாஜக மாநில, தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடியிடம் எதுவும் பேசவில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.

ஆனாலும், இந்த சந்திப்பில் கூட்டணி விரிவாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரை சந்திக்கிறார். தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது அவர் குறித்து விவாதிப்பார் என தெரிகிறது.மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அஞ்சலை தலை வெளியீட்டு விழாவிலும் நயினார் நாகேந்திரன் பங்கேற்கிறார்.