இந்திய திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியின் 143-வது பிறந்த நாள் விழா இந்தியா முழுவதும் இன்று (டிசம்பர் 11) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதில்,
“எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்”
என அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று. டிசம்பர் குளிரில் இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


