விருப்ப மனுக்கள் பெற பனையூருக்கு வாங்க… டாக்டர் அன்புமணி அழைப்பு!

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடமிருநது டிசம்பர் 14-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 14.12.2025 ஞாயிற்றுக் கிழமை முதல் 20.12.2025 சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாள்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான டிசம்பர் 20-ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

மீண்டும் ஒரு விஜய் டிவி சீரியல் நடிகை தற்கொலை – காரணம் என்ன..?

கணவர், மனைவிக்கும் இடையேயான சண்டையில் விஜய் டிவி சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சீரியல் நடிகை விஜய் டிவி சீரியல்களான “சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி” போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில்…

முன்னாள் சபாநாயகர் அதிரடியாக கைது: விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு

வாகன விபத்தை ஏற்படுத்தியதாக இலங்கையின் முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல காவல்துறையினரால் இன்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணம் செய்த வாகனம் சபுகஸ்கந்த பகுதியில் ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *