சட்டமன்றத் தேர்தலுக்கு தயாரான அதிமுக…டிசம்பர் 15 முதல் விருப்ப மனு விநியோகம்

அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 15.12.2025 – திங்கட்கிழமை முதல் 23.12.2025 செவ்வாய்க்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

மீண்டும் ஒரு விஜய் டிவி சீரியல் நடிகை தற்கொலை – காரணம் என்ன..?

கணவர், மனைவிக்கும் இடையேயான சண்டையில் விஜய் டிவி சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சீரியல் நடிகை விஜய் டிவி சீரியல்களான “சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி” போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில்…

முன்னாள் சபாநாயகர் அதிரடியாக கைது: விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு

வாகன விபத்தை ஏற்படுத்தியதாக இலங்கையின் முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல காவல்துறையினரால் இன்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணம் செய்த வாகனம் சபுகஸ்கந்த பகுதியில் ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *