கீழக்கரை அருகே திமுக நகர் மன்ற தலைவரின் கார், ஐயப்ப பக்தர்களின் கார் மீது மோதி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அவர்கள் இன்று அதிகாலை கீழக்கரை கடற்கரை சாலை கும்பிடுமதுரை அருகே சாலையோரம் காரை நிறுத்தியிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கீழக்கரையைச் சேர்ந்த திமுக நகர் மன்ற தலைவரின் கார், ஆந்திரா பக்தர்களின் காரில் மோதியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறிதது தகவல் அறிந்த கீழக்கரை போலீஸார்,விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்த 8 பேரைமீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆந்திரா மாநில ஐயப்ப பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்படி ஆந்திராவை சேர்ந்த ஐந்து பக்தர்களில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 7 பேரில் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரராவ், அப்பாரோ நாயுடு, பண்டார சந்திரராவ், ராமர் மற்றும் கீழக்கரை திமுக நகர் மன்ற தலைவரின் கார் ஓட்டுநர் முஸ்தாக் அகமது ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து கீழக்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதிகாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


