மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த, அரசு பள்ளி ஆசிரியரை கைது செய்யாமல் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை பழங்காநகத்தில் அரசு தியாகராஜர் பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் என இருபாலரும் கல்வி பயின்று வருகிறார்கள்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
இப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு ஓவிய ஆசிரியர் ஜெயராமன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் விவரத்தை கூற, பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.
இருப்பினும் அவர்கள் தரப்பில், உரிய பதிலும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டப்படுக்கிறது.

போக்சோ வழக்கு!
இந்த விஷயம் பெரிதாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ஜெயராமன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.

பாஜக நிர்வாகி ஜெயராமன்!
அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆசிரியர் ஜெயராமன் பாஜக நிர்வாகி என்பதால் அவர் மீது காவல்துறையும், அவர் பணியாற்றும் பள்ளி தலைமை ஆசிரியரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஜெயராமன் தான் சிறை சென்றுவிடுவோமோ! என்று பயந்து சில காலம் தலைமறைவாக இருந்துள்ளார்.

அவர் மீது பதிவுச் செய்யப்பட்ட போக்சோ வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே! பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகள் படிக்கும் அதே பள்ளியில் இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சகஜமாக வந்து சென்றதாக கூறப்படுகிறது.

முற்றுகை போராட்டம்- கைது
இதற்கு பெற்றோர் உட்பட்ட பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) மதுரை மாநகர் சார்பாக ஆசிரியர் ஜெயராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட பள்ளி வாசல் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

துறை ரீதியான நடவடிக்கை!
தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது, குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயராமன் மீது உடனே துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து அவரை பள்ளியில் நுழைய அனுமதி அளிக்கக்கூடாது என்று பெற்றோர்கள், சமூக ஆவர்வலர்கள் என பலருல் கோரிக்கை விடுத்துள்ளனர்.


