நடிகை விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய “சிக்மா” திரைப்படத்தின் டீசர் வரும் 23ஆம் தேதி மாலை 5மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநராக களமிறங்கும் விஜய் மகன் :-
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் கட்சியைத் தொடங்கி, முழுநேர அரசியலுக்கு சென்று விட்டதால், பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகும் ’ஜனநாயகன்’ தன்னுடைய இறுதி படம் என்று விஜய் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சினிமா உலகில் களமிறங்கும் முதல் திரைப்படம் ‘சிக்மா’ (Sigma). இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

படத்தின் தொடக்க பூஜை மற்றும் படப்பிடிப்புத் தளத்தின் விறுவிறுப்பான காட்சிகள் அடங்கிய வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.
ஆக்ஷன் – திரில்லர் என உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். கேத்ரின் தெரசா நாயகியாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) நிறுவனம் மற்றும் ஜே.எஸ்.கே மீடியா இணைந்து பெரும் பொருட்செலவில் “சிக்மா” படத்தை உருவாக்கி உள்ளன.

‘சிக்மா’ படத்தின் டீசர் வரும் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக களமிறங்கும் முதல் திரைப்படம் என்பதால் ‘சிக்மா’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


