தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, மீண்டும் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும், ஐட்டம் சாங்-க்கு நடனம் ஆடுவதற்கும் ‘தான் தயார்’ என்பதை காட்டியுள்ளார் நடிகை ஸ்ரேயா.
தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி, விஜய் உடன் அழகிய தமிழ் மகன், தனுஷ் உடன் குட்டி, விக்ரம் உடன் கந்தசாமி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.


திருமணம் – குழந்தை – ஓய்வு
இவர் தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரு கோச்சேவை கடந்த 2018ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை ஸ்ரேயா, தற்போது படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தலைகாட்டி வருகிறார்.


மீண்டும் சினிமாவில் ஸ்ரேயா
இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான “ரெட்ரோ” படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி ‘கம்-பேக்’ கொடுத்துவிட்டார். இப்போ உள்ள ரசிகர்களுக்கும் நடிகை ஸ்ரேயாவின் ஆட்டம் பிடித்து விட்டது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துவிட்டார் நடிகை ஸ்ரேயா.


“கவர்சசி” போட்டோ ஷூட்
மீண்டும் சினிமாவில் நடிக்க தயார் என்பதை காட்டும் விதமாக, கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் ஸ்ரேயா.






