ஹெச்.ராஜா நடித்த ‘கந்தன் மலை’ இன்று யூடியூப்பில் ரிலீஸ்!

மதுரை திருப்பரங்குன்றம் மலையை மையமாக வைத்து உருவான ‘கந்தன் மலை’ திரைப்படம் இன்று (டிசம்பர் 19) யூடியூப்பில் வெளியாகிறது.

மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் மலையின் தர்ஹா அருகே அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற  நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் தீர்ப்பை நிறைவேற்றும் பட்சத்தில் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டும் தமிழக அரசு தீபம் ஏற்ற மறுப்பு தெரிவித்து வருகிறது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தர்ஹா அருகே அமைந்திருப்பது தீபத்தூண் கிடையாது எல்லைக்கல் என தமிழக அரசும், அந்த தூண் தர்ஹாவுக்குச் சொந்தமானது என தர்ஹா நிர்வாகமும் வாதிட்டு வருகிறது. அது தீபத்தூண் தான் என இந்துத்துவா அமைப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையை கதைக்களமாக வைத்து ‘கந்தன் மலை’ என்று திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். பாஜக மாநில ஆன்மிகம் மற்றும் கோயில்கள் மேம்பாட்டு பிரிவு செயலாளர் சிவபிரபாகர், சந்திரசேகரன் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்தை வீரமுருகன் இயக்கியுள்ளார். இரண்டரை மணி நேரம் ஓடும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த படம் தற்போது ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியல் நெருக்கடியால் இந்தப் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர் சிவபிரபாகர் கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு தியேட்டர் தருவதாக அறிவித்தவர்கள்கூட இப்போது, நீங்களே தியேட்டரை வாடகைக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். நாங்களாக திரையிட முடியாது என்று கூறிவிட்டனர். தியேட்டரை வாடகைக்கு எடுத்து ஓட்டுவது இயலாத காரியம். எனவே யூ டியூப்பில் வெளியிட தீர்மானித்துவிட்டோம். அதன்படி இன்று ‘தாமரை’ என்ற யூடியூப் தளத்தில் படம் வெளியாகிறது என்று தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவபிரபாகர் கூறியுள்ளார்.

Related Posts

கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி சிறுநீரகத்தை இழந்த விவசாயி!

கந்து வட்டிக்காரர்கள் மிரட்டலால் தனது சிறுநீரகத்தை 8 லட்ச ரூபாய்க்கு விவசாயி விற்ற கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ,சந்திராபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன். தனது தொழில் நஷ்டமடைந்ததால் பால் வியாபாரம் செய்ய ரோஷன் முடிவு செய்தார். இதற்காக உள்ளூரை…

ஹிஜாப்பை முதல்வர் இழுத்ததால் அவமானம்… அரசு வேலையை உதறிய பெண் டாக்டர்!

அரசு விழாவில் பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமாரால் ஹிஜாப் கழற்றப்பட்ட பெண் டாக்டர் நுஸ்ரத் பர்வீன் அரசு வேலையை ஏற்க மறுத்துள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. பிஹாரில் அரசுத் திட்டத்தின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ் டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் புதிதாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *