ஹிஜாப்பை முதல்வர் இழுத்ததால் அவமானம்… அரசு வேலையை உதறிய பெண் டாக்டர்!

அரசு விழாவில் பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமாரால் ஹிஜாப் கழற்றப்பட்ட பெண் டாக்டர் நுஸ்ரத் பர்வீன் அரசு வேலையை ஏற்க மறுத்துள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

பிஹாரில் அரசுத் திட்டத்தின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ் டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் டாக்டர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாப் முகத்திரையை பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இழுத்துப் பார்த்தார். இதற்கு ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலையத்தில் இது தொடர்பாக பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரால் ஹிஜாப் கழற்றப்பட்ட பெண் டாக்டர் நுஸ்ரத் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இம்மாதம் 20-ம் தேதி அவருக்கு பணியில் சேர நியமனக் கடிதம் கிடைத்துள்ளது. ஆனால், அவர் பணியில் சேரவில்லை என்றும் அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஹிஜாப் கழற்றப்பட்ட அவமானத்தின் சுமை காரணமாக அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் தெரிவித்தார். மேலும் பணியில் சேர வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து நிர்பந்திக்கப்படுவதாவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Posts

கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி சிறுநீரகத்தை இழந்த விவசாயி!

கந்து வட்டிக்காரர்கள் மிரட்டலால் தனது சிறுநீரகத்தை 8 லட்ச ரூபாய்க்கு விவசாயி விற்ற கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ,சந்திராபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன். தனது தொழில் நஷ்டமடைந்ததால் பால் வியாபாரம் செய்ய ரோஷன் முடிவு செய்தார். இதற்காக உள்ளூரை…

ஹெச்.ராஜா நடித்த ‘கந்தன் மலை’ இன்று யூடியூப்பில் ரிலீஸ்!

மதுரை திருப்பரங்குன்றம் மலையை மையமாக வைத்து உருவான ‘கந்தன் மலை’ திரைப்படம் இன்று (டிசம்பர் 19) யூடியூப்பில் வெளியாகிறது. மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் மலையின் தர்ஹா அருகே அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற  நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *