
பாலிவுட் நாயகியான கிருதி சனோன் தனது கடுமையான டம்பல் லஞ்ச் பயிற்சியுடன், ஃபிட்டனஸில் மற்றவர்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். இந்த பயிற்சி கால்கள், சமநிலை மற்றும் மைய தசைகளை வலுப்படுத்துவதோடு, வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது. நடிப்பு, ஃபேஷன் மட்டுமல்ல, ஃபிட்னஸிலும் பாலிவுட் நடிகையான கிருதி சனோன் முன்னணியில் இருக்கிறார். யோகா முதல் ஜிம் வரை உடற்பயிற்சியில் தனது முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடும் கிருதி, சமீபத்தில் போசு பந்தில் (Bosu ball) டம்பல் லஞ்ச் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகிய நிலையில், அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கிருதியின் பயிற்சியாளரான கரண் சாவ்னி பகிர்ந்த அந்த வீடியோவில், கிருதி ஒரு வெள்ளை டேங்க் டாப், கருப்பு ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் லெகிங்ஸ் அணிந்து, நேராகவும், சென்டராகவும் நின்று கொண்டு, டம்பல் லஞ்ச் செய்கிறார். அவரது இந்த வீடியோ ஃபிட்டனஸில் அவரது உறுதியை சுட்டிக் காட்டுகிறது.