உங்க கலோரியை சர்ருனு குறைக்க இந்த ஒரு பயிற்சி போதும்.. பிரபல நடிகையின் ஒர்க்கவுட் வீடியோ..!

பாலிவுட் நாயகியான கிருதி சனோன் தனது கடுமையான டம்பல் லஞ்ச் பயிற்சியுடன், ஃபிட்டனஸில் மற்றவர்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். இந்த பயிற்சி கால்கள், சமநிலை மற்றும் மைய தசைகளை வலுப்படுத்துவதோடு, வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது. நடிப்பு, ஃபேஷன் மட்டுமல்ல, ஃபிட்னஸிலும் பாலிவுட் நடிகையான கிருதி சனோன் முன்னணியில் இருக்கிறார். யோகா முதல் ஜிம் வரை உடற்பயிற்சியில் தனது முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடும் கிருதி, சமீபத்தில் போசு பந்தில் (Bosu ball) டம்பல் லஞ்ச் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகிய நிலையில், அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கிருதியின் பயிற்சியாளரான கரண் சாவ்னி பகிர்ந்த அந்த வீடியோவில், கிருதி ஒரு வெள்ளை டேங்க் டாப், கருப்பு ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் லெகிங்ஸ் அணிந்து, நேராகவும், சென்டராகவும் நின்று கொண்டு, டம்பல் லஞ்ச் செய்கிறார். அவரது இந்த வீடியோ ஃபிட்டனஸில் அவரது உறுதியை சுட்டிக் காட்டுகிறது.

  • Related Posts

    மலேசியா ஆசிய அழகுக்கலை போட்டியில் 5 பதக்கங்களை அள்ளிய இலங்கை!

    மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்கரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. இதில் யாழ் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளியும் ஒரு வெண்கலமுகமாக இரு பதக்கங்கள் கிடைத்தன. மலேசியாவில் ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்கரப் போட்டியில் நடைபெற்றது. இதில்…

    முதல் முறை ரத்த தானம் செய்பவர்கள் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!

    ரத்த தானம் என்பது ஒரு உயிரை காக்க உதவ கூடிய ஒரு அற்புதமான செயல். உங்கள் ரத்தத்தை தானம் செய்வதன் மூலம், மற்றவர்களின் உயிரை காப்பாற்ற முடியும். இது மிகவும் எளிமையான செயல் மற்றும் இதில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *