மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்கரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. இதில் யாழ் சுலக்ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளியும் ஒரு வெண்கலமுகமாக இரு பதக்கங்கள் கிடைத்தன.
மலேசியாவில் ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்கரப் போட்டியில் நடைபெற்றது. இதில் 14 நாடுகளைச் சேர்ந்த அழகுக்கலை மற்றும் சிகையலங்கார நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் பங்கேற்ற இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா அன்ட் அகாடமியின் உரிமையாளர் சுலக்ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமுமாக இரண்டு பதக்கங்கள் கிடைத்தன.
அதே போல இலங்கையில் உள்ள கண்டியைச் சேர்ந்த எல்.தர்ஸனுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்தன. இலங்கையைச் சேர்ந்த 7 அழகுக்கலை நிபுணர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். அதில் 5 பதக்கங்களை அள்ளியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


