
ரத்த தானம் என்பது ஒரு உயிரை காக்க உதவ கூடிய ஒரு அற்புதமான செயல். உங்கள் ரத்தத்தை தானம் செய்வதன் மூலம், மற்றவர்களின் உயிரை காப்பாற்ற முடியும். இது மிகவும் எளிமையான செயல் மற்றும் இதில் எந்த ஆபத்தும் இல்லை.
ஆனால் முதல் முறையாக ரத்த தானம் செய்வது சற்று சிரமமாக தோன்றலாம், ஆனால் அது நீங்கள் செய்ய கூடிய மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் கருணைமிக்க செயல்களில் ஒன்றாகும். நாம் ஒருமுறை ரத்த தானம் செய்வதன் மூலம் சுமார் 3 உயிர்களை காப்பற்ற முடியும். உங்கள் முதல் ரத்த தான அனுபவத்தை சீராக, பாதுகாப்பாக மாற்ற தயாராக இருப்பதும், உறுதியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கடந்த ஜூன் 14-ஆம் தேதி உலக ரத்த தானம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீங்கள் ரத்த தானம் செய்ய நினைக்கிறீர்களா? முதல் முறையாக ரத்த தானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இங்கே…சாகேத்தில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ரத்தமாற்ற மருத்துவ இயக்குநர் மற்றும் தலைவர் டாக்டர் சங்கீதா பதக், முதல் முறையாக ரத்த தானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களின் பட்டியலை பகிர்ந்து கொண்டுள்ளார்.