
நடிகை மலைக்கா அரோரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடைகள் மற்றும் பின்புற தசைகளை வலுப்படுத்த மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் ஒரு எளிய உடற்பயிற்சி வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த பயிற்சி, தொடை மற்றும் இடுப்புப் பகுதிகளை வலுப்படுத்த உதவுகிறது.
நடிகை மற்றும் யோகா ஆர்வலரான மலைக்கா அரோரா, சமூக ஊடகங்களில் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸ் சார்ந்த தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடைகள் மற்றும் இடுப்புப் பகுதிகளை வலுப்படுத்த மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் ஒரு எளிய, ஆனால் சிறப்பு வாய்ந்த “ஸ்குவாட்” பயிற்சியை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பயிற்சிகள்
மலைக்கா அரோரா இந்த பயிற்சியில், டம்பல்களை பயன்படுத்தி கால்கள், இடுப்பு, பின்புறம் மற்றும் மையப்பகுதியை வலுப்படுத்தக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்கிறார். ஸ்கல்ப்டட் சிம்ப்ளிசிட்டி என்ற தலைப்பில், வெறும் 15 முறை என தொடர்ந்து மூன்று செட்கள் செய்வது நல்லது என்கிற பரிந்துரைரோடு அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.