உங்க வெயிட் முழுக்க காலில் ஏறுகிறதா..? பனி போல் கரைய இந்த ஒர்க் அவுட் பண்ணுங்க.. பிரபல நடிகையின் டிப்ஸ்..!

நடிகை மலைக்கா அரோரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடைகள் மற்றும் பின்புற தசைகளை வலுப்படுத்த மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் ஒரு எளிய உடற்பயிற்சி வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த பயிற்சி, தொடை மற்றும் இடுப்புப் பகுதிகளை வலுப்படுத்த உதவுகிறது.
நடிகை மற்றும் யோகா ஆர்வலரான மலைக்கா அரோரா, சமூக ஊடகங்களில் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸ் சார்ந்த தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடைகள் மற்றும் இடுப்புப் பகுதிகளை வலுப்படுத்த மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் ஒரு எளிய, ஆனால் சிறப்பு வாய்ந்த “ஸ்குவாட்” பயிற்சியை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பயிற்சிகள்
மலைக்கா அரோரா இந்த பயிற்சியில், டம்பல்களை பயன்படுத்தி கால்கள், இடுப்பு, பின்புறம் மற்றும் மையப்பகுதியை வலுப்படுத்தக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்கிறார். ஸ்கல்ப்டட் சிம்ப்ளிசிட்டி என்ற தலைப்பில், வெறும் 15 முறை என தொடர்ந்து மூன்று செட்கள் செய்வது நல்லது என்கிற பரிந்துரைரோடு அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
  • Related Posts

    முதல் முறை ரத்த தானம் செய்பவர்கள் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!

    ரத்த தானம் என்பது ஒரு உயிரை காக்க உதவ கூடிய ஒரு அற்புதமான செயல். உங்கள் ரத்தத்தை தானம் செய்வதன் மூலம், மற்றவர்களின் உயிரை காப்பாற்ற முடியும். இது மிகவும் எளிமையான செயல் மற்றும் இதில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால்…

    உங்க கலோரியை சர்ருனு குறைக்க இந்த ஒரு பயிற்சி போதும்.. பிரபல நடிகையின் ஒர்க்கவுட் வீடியோ..!

    பாலிவுட் நாயகியான கிருதி சனோன் தனது கடுமையான டம்பல் லஞ்ச் பயிற்சியுடன், ஃபிட்டனஸில் மற்றவர்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். இந்த பயிற்சி கால்கள், சமநிலை மற்றும் மைய தசைகளை வலுப்படுத்துவதோடு, வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது. நடிப்பு, ஃபேஷன் மட்டுமல்ல, ஃபிட்னஸிலும் பாலிவுட்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *