பிரியாணி பிரியரா நீங்க… மறைந்துள்ள ஆபத்துகள்… எச்சரிக்கும் மருத்துவர்…

Biryani Health Risk s| நம்முடைய உடலில் உள்ள கொழுப்பு அளவை பொருத்தே நம்முடைய உணவு பயன்பாடு அமைய வேண்டும்.அதை தவிர்த்து விட்டு கொழுப்பு அதிகம் உள்ள பிரியாணியை போன்ற உணவு வகைகளை  தேடிச் செல்லும் பொழுது தான் நமக்கு அது பிரச்சினையாக வந்து விடுகிறது .

உணவு குறித்து வரும் உயிரிழப்பு செய்திகள் பார்க்கும்போது இயல்பாகவே நமக்கு படபடக்க ஆரம்பித்துவிடும். அதிலும் குறிப்பாக சமீபமாக பிரியாணி – மாரடைப்பு குறித்து செய்திகளுமே வந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு எந்த அளவுக்கு அதிகமாகிறதோ அதே அளவுக்கு இரவு நேர பிரியாணி கடைகள் பெருகிவிட்டன. பெரும்பாலும் அனைவருக்குள்ளும் Mid -Night Cravings கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளது.

கொழுப்பும், எண்ணெயும் அதிகமுள்ள பிரியாணி நிச்சயமாக மாரடைப்பை அழைத்து வர முக்கிய காரணியாக உள்ளது. கடைகளில், பலமுறை பயன்படுத்திய எண்ணெயில் பிரியாணி செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பலர் எச்சரித்துள்ளனர். இருந்தும் கூட ‘தீவிர பிரியாணி பிரியர்கள் நம்மில் பலர் உண்டு.’ பிரியாணி சாப்பிடுவது தவறில்லை. ஆனால் எப்போது சாப்பிட வேண்டும்? எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? என்ற உணவு கட்டுப்பாடு தெரிந்திருக்க வேண்டும்.

வாரத்திற்கு ஒரு நாள் என்பதே போதுமானது என்கிறார். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மற்றும் உயர் சிறப்பு மருத்துவமனையின் இருதய அறிவியல் துறைத் தலைவர் செஸ்லி மேரி மெஜிலா “நம்முடைய விருப்பத்திற்காக என்றாவது ஒரு நாள் மதியம் பிரியாணி சாப்பிடுவது தவறு இல்லை. ஆனால், பிரியாணியை தினமும் சாப்பிடுவது மற்றும் நள்ளிரவு, அதிகாலையில் சாப்பிடுவது உடல்நிலைக்கு நல்லது இல்லை. ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து, சர்க்கரை நோய் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். இது அனைத்தும் சேர்ந்துதான் மாரடைப்புக்கான முக்கிய காரணமாக அமைகின்றது.

  • Related Posts

    திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி திருட்டு.. விசாரணை தொடங்காதது ஏன் என இபிஎஸ் கேள்வி

    திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி முறைகேடு குறித்து இதுவரை விசாரணை தொடங்காதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ்…

    இத கொஞ்சம் படிச்சு பாருங்க..! எளிமையான சமையல் குறிப்புகள்…!

    என்னங்க..! என்ன? சமையல் பண்ணாலும் சரியாவே வர மாட்டேங்குதுனு வருத்தப்படுறீங்களா..! ருசியா டேஸ்ட்டா சமைக்கிறதுக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சா.. அந்த சமையல் பொருட்கள் வீணாக போகுதுனு வருத்தப்படுறீங்களா..! இந்த டிப்ஸ்-களை பாலோ பண்ணுங்க.. லேடீஸ்… கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *