வலுப்பெறும் புயல் சின்னம்- 8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’
தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில்…
ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி- தவெக உறுப்பினர் கைது!
ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான தவெக உறுப்பினர் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் தண்டுரை பகுதியில் நாட்டு வெடி, பட்டாசுகளை ஆறுமுகம், அவரது மகன் விஜய் தயாரித்து…
தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதால் ஆத்திரம் – கட்டணம் வசூலிக்காமல் டோல்கேட்டை திறந்து விட்ட ஊழியர்கள்!
தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் 5 ஆயிரம் வாகனங்களுக்கு பணம் வாங்காமல் டோல்கேட்டை திறந்து விட்டதால் நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி என்றாலே வழங்கப்படும் மிகை ஊதியமான போனஸை அனைத்து ஊழியர்களும் எதிர்பார்ப்பார்கள். இந்தியா முழுவதும்…
விஜய்க்கு அட்வைஸ் செய்த நடிகை கஸ்தூரி : நல்ல கூட்டணி அமைக்க வேண்டும்..!
பாஜக பிரமுகரான நடிகை கஸ்தூரி, தவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளார். அண்ணாமலையார் தரிசனம் பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான கஸ்தூரி தனது மகனுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் பதவிக்கு…
நிரம்பியது வைகை அணை – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தேனி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீர்பிடிப்பு…
தீபாவளி பண்டிகையால் சென்னையில் காற்று மாசு கிடுகிடு உயர்வு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடியதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தீபாவளி பண்டிகை நேற்று (அக்.20) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் தீபாவளியை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசு வெடித்து தீபாவளி…
வங்க கடலில் புயல் சின்னம்… 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இன்று (அக்.21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடலில், கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
புஸ்ஸி ஆனந்த் வேண்டாம்!- கட்சியை விட்டு நீக்க வலியுறுத்தல்
தவெக கட்சியை விட்டு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நீக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.…
தேசிய விருது வென்ற படத்தின் 2ம் பாகம் : படப்பிடிப்பு நிறைவு
தேசிய விருது பெற்ற “குற்றம் கடிதல்” படத்தின் 2ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. தேசிய விருது :- கடந்த 2015-ம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் உருவான ‘குற்றம் கடிதல்’ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்…
தமிழக விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி- எடப்பாடி பழனிசாமி வேதனை
நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடும் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதர்மத்தை அழித்து தர்மத்தின் வெற்றியைக் குறிக்கும்…










