தேசிய விருது பெற்ற “குற்றம் கடிதல்” படத்தின் 2ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய விருது :-
கடந்த 2015-ம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் உருவான ‘குற்றம் கடிதல்’ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு “தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதும்” கிடைத்தது.

பாலியல் கல்வி குறித்தும், ஆசிரியர் – மாணவர்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் முரண் குறித்தும், இந்தப் படத்தில் இயக்குநர் பிரம்மா யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருப்பார்.

குற்றம் கடிதல் -2
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, “குற்றம்- கடிதல்-2” படம் உருவாகி உள்ளது. திரைக்கதை எழுதிய இப்படத்தை எஸ்.கே. ஜீவா என்பவர் இயக்கியுள்ளார்.
எஸ்.கே. ஜீவா பார்த்திபன் நடித்த ‘புதுமைப்பித்தன்’, கார்த்திக் நடித்த ‘லவ்லி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தயாரிப்பாளர் டூ நடிகர் :-
முதல் பாகத்தை தயாரித்த ஜே.எஸ்.கே. சதீஸ்குமார், 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, பாலாஜி, சாந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘குற்றம் கடிதல்-2” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


