பாஜக பிரமுகரான நடிகை கஸ்தூரி, தவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளார்.
அண்ணாமலையார் தரிசனம்
பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான கஸ்தூரி தனது மகனுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் பதவிக்கு ஆசைப்பட்ட அரசியலுக்கு வரவில்லை” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கு கண்டனம்
மேலும், “நோ பார்க்கிங்’கில் காரை நிறுத்தியதற்காக, காரை லாக் செய்த போலீசார் ஒருவரை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் தாக்க முற்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும்; இதுபோன்ற சம்பவங்கள் மன்னர் ஆட்சியில் தான் நடக்கும்” என்றும் குற்றம்சாட்டினார்.

விஜய்க்கு அட்வைஸ்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் இருக்கும் கட்சி நிர்வாகிகள் சரியில்லை என்றும் அவர்களை விட்டு விலகுவது விஜய்க்கு நல்லது என்றும், மறைமுகமாக நடிகை கஸ்தூரி சுட்டிக்காட்டி பேசினார். “விஜய் புதிய நல்ல கூட்டணி அமைக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


