ஆக.19-ம் தேதி தான் கெடு- தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பிஹார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆக.19-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்…
தூய்மை பணியாளர்களின் மாண்பை திராவிட மாடல் அரசு விட்டுக்கொடுக்காது- மு.க.ஸ்டாலின்!
தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என…
நள்ளிரவில் கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் நக்சலைட்டுகளா?- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம்…
ஷாக்… சொத்துக்காக தந்தை மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மகள்கள்!
சொத்து தகராறு காரணமாக வயதான தந்தையை இரண்டு மகள்கள் கொடூரமாக தாக்கிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் தான், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சஸ்னி தாலுகா பகுதியில் ஒரு வயதான முதியவரை…
மதுரை மேயர் பதவியை பறிக்கத் தயங்கும் திமுக- பின்னணி முழு விவரம்
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் பொன் வசந்த் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவியான இந்திராணியின் மேயர் பதவியைப் பறிக்க திமுக தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பிரச்னையை கையில் எடுக்க எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன. மதுரை மாநகராட்சியின் மேயராக…
குவைத்தில் பயங்கரம்- கள்ளச்சாராயம் குடித்த 16 இந்தியர்கள் உயிரிழப்பு
குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒரு தமிழர் உட்பட 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த அரபு நாடான குவைத்தில் ஏராளமான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக கட்டுமானம், மின்சாதனம், போர்வெல், ஓட்டுநர் பணிகளுக்கு…
சுதந்திர தினக்கொண்டாட்டத்தில் வன்முறை- கராச்சியில் அப்பாவி மக்கள் 3 பேர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் போது கராச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 64 பேர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தான் பிரிந்து சென்றது. இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் பாகிஸ்தானில் ஆகஸ்ட்…
மருத்துவமனை 3வது மாடியில் பயங்கர தீ- செவிலியர்கள் செய்த காரியம்!
மத்தியப்பிரேதேசத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 9 நோயாளிகளை செவிலியர்கள் காப்பாற்றியுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் டாமோவில் மாவட்ட மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மூன்றாவது மாடியில் பொது வார்டு உள்ளது. நேற்று மாலை திடீரென…
திருமணமான ஆணுடன் தொடர்பு- மகளை ஆணவக் கொலை செய்த தந்தை தலைமறைவு
குஜராத் மாநிலத்தில் திருமணமான ஆணுடன் தொடர்பு வைத்திருந்த மகளை பாலில் விஷத்தை கொடுத்து கழுத்தை நெரித்து ஆணவக் கொலை செய்த தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர். குஜராத் மாநிலம் பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தராட் காவல் நிலையத்தில் ஹரேஸ் சவுதாரி என்பவர்…
இளம்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இன்ஸ்டாகிராம்- நடந்தது என்ன?
காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்ட இளம்பெண், இந்த காட்சியை வீடியோவாக்கி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதைப் பார்த்த போலீஸார், அவரை துரித கதியில் காப்பாற்றிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜிபூர் மாவட்டத்தைச்…