இளம்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இன்ஸ்டாகிராம்- நடந்தது என்ன?

காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்ட இளம்பெண், இந்த காட்சியை வீடியோவாக்கி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதைப் பார்த்த போலீஸார், அவரை துரித கதியில் காப்பாற்றிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அதிக அளவு தூக்க மாத்திரைகளை நேற்று மாலை சாப்பிட்டுள்ளார். அதற்கு முன் இன்ஸ்டாகிராமில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிடுவதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். இதைப் பார்த்த உத்தரப்பிரதேச டிஜிபி அலுவலகம், இந்த வீடியோவை லக்னோவிற்கு அனுப்பியது. அவர்கள் அந்த வீடியோவை சதாத் காவல் நிலையத்திற்கு அனுப்பி உடனடியாக இளம்பெண்ணை காப்பாற்றுமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து சதாத் காவல்துறையினர் முகவரியை விசாரித்த போது இளம்பெண்ணின் வீடு 12 கி.மீ தூரத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக ஒரு பெண் போலீஸ்காரருடன் போலீஸார் வீடியோவை வெளியிட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கு வாகனத்தில் அதிவேகமாகச் சென்றனர். தங்கள் மகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அவரது வீட்டில் இருந்த யாருக்கும் தெரியவில்லை.

அவரது அறைக்குச் சென்று போலீஸார் பார்த்த போது இளம்பெண் மயங்கி கிடந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 18 நிமிடங்களில் போலீஸாரால் மீட்கப்பட்டதால், அவர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தற்போது இளம்பெண் நல்லநிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தங்கள் மகள் உயிரைக் காப்பாற்றிய காவல் துறையினருக்கு அவரது பெற்றோர் நன்றி தெரிவித்தனர். பொதுவாக சமூக ஊடகங்கள் என்பது தனி மனித விரோதம், வெறுப்பு பிரசாரம் போன்றவற்றை செய்யும் நிலையில், ஒரு பெண்ணின் உயிரை அது காப்பாற்றியுள்ளது  உத்தரப்பிரதேசத்தில் நிஜமாகியுள்ளது.

Related Posts

வானிலை மையம் எச்சரிக்கை… தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும்!

நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்

பாக்பாத் : உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்ததால், 12 அடி உயர ஹோட்டல் கூரையில் இருந்து, அந்த பெண் குதித்து தப்பியோடினார். உ.பி.,யில் உள்ள பாக்பாத் மாவட்டத்தின் ககோர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *