அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல- அனுராக் தாக்கூருக்கு கனிமொழி கண்டனம்

மாணவர்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும் என
தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஹமீர்பூரைச் சேர்ந்த பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார்.

அப்போது பள்ளி குழந்தைகளிடம் அனுராக் தாக்கூர், , “விண்வெளியில் முதலில் பயணம் செய்தவர் யார்” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பள்ளி மாணவர்கள், “நீல் ஆம்ஸ்ட்ராங்.” என்று பதிலளித்தனர். அதற்கு அனுராக் தாக்கூர், “எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ” நாம் இன்றும் நம்மை தற்போதைய நிலையில் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவாறே நாம் இருக்கிறோம். எனவே, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தத் திசையில் பார்த்தால் நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள்” என தெரிவித்தார்.

இதற்கு திமுகவைச் சேர்ந்த தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர், பள்ளி மாணவர்களிடம் நிலவில் முதன்முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என்று கூறுவது மிகவும் கவலையளிக்கிறது. அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல. வகுப்பறைகளில் மாணவர்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும். இந்தியாவின் எதிர்காலம், உண்மையை கட்டுக்கதையுடன் குழப்பிக் கொள்ளாமல், ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது” என்று கூறியுள்ளார்.

Related Posts

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இன்று கனமழை- சூறாவளி காற்று வீசும்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகப் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு…

கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள்தண்டனை- உ.பி அரசு வினோத உத்தரவு

மனிதர்களை இரண்டாவது முறையாக கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசு ஒரு விநோத உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியா முழுவதும் தெருநாய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வகிறது. இந்த நிலையில், தெருநாய் பிரச்னையை கையாள உச்ச நீதிமன்றம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *