வானில் பிறை தெரிந்தது – செப்டம்பர் 5-ம் தேதி மிலாடி நபி விழா!

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகைகளில் ஒன்றான மிலாடி நபி விழா செப்டம்பர்: 5-ம்தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமிய மக்களின் புனிதப் பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி. இறை தூதர் முகமது நபியின் பிறந்த நாளாக இஸ்லாமியர்கள் மிலாதுன் நபி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். மிலாதுன் நபி அன்று இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கடைபிடித்து வருகின்றனர்.  மேலும் ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள்.

இந்த நிலையில், மிலாடி நபி விழா செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை நேற்று தமிழகத்தில் தெரிந்தது. எனவே மிலாடி நபி விழா (இறை தூதர் முகமது நபி பிறந்தநாள்) வருகிற 5-ம் தேதியான வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

கர்நாடகாவில் பயங்கரம்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குள் லாரி புகுந்து 8 பேர் பலி

கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குள் லாரி புகுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பல மாதங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் உள்ள மொசலே ஹோசஹள்ளி கிராமத்தில்…

மும்பையில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து வெடிக்கும்- கிலி ஏற்படுத்தியவர் கைது

மும்பையில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை பயன்படுத்தி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடப்பட்ட சம்பவத்தில் பிஹாரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 34 வாகனங்களில் வரும் 14 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *