வானிலை மையம் எச்சரிக்கை… தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும்!

நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணத்தால் தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை, விருதுநகர், கோவை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

  • Related Posts

    அண்ணாமலைக்கு செக் வைக்கிறாரா நயினார் நாகேந்திரன்?… டெல்லிக்கு அவசர பயணம்

    அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சியினரும்…

    தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இன்று கனமழை- சூறாவளி காற்று வீசும்!

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகப் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *