தமிழகத்திற்கு செப்.2-ம் தேதி வருகிறார் குடியரசு தலைவர்!
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு செப்.2-ம் தேதி அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தலைவராக உள்ள திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக…
பெட்டி, பெட்டியாக சிக்கிய 2 ஆயிரம் கிலோ வெடிமருந்து… கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தல்!
கோவை அருகே வேனில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து கேரளாவிற்கு ஜெலட்டின் வெடிப்பொருள் கடத்தப்படுவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு இன்று அதிகாலை ரகசிய…
ஏறுமுகம் காட்டும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ.400 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை மூலம் தங்கத்தின் விலை…
பதவி பறிப்பு மசோதாவிற்கு இந்தியா கூட்டணியின் ஆதரவு கிட்டும்- அமித்ஷா நம்பிக்கை
பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதவிகளை நீக்கும் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எம்.பிக்கள் ஆதரவு தெரிவிக்கக்கூடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து…
நகர்ப்புற பள்ளிகளிலும் இன்று முதல் காலை உணவுத் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரையில் கடந்த 15.9.2022 அன்று…
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் ஐந்தா, ஏழா?…. டிரம்பின் பேச்சால் குழப்பம்!
இந்தியா, பாகிஸ்தான் சண்டையின் போது 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆபரேஷன்…
பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… திண்டுக்கல்- செங்கோட்டை ரயில் சேவை ரத்து
ஈரோடு- செங்கோட்டை இடையேயான ரயில் சேவை ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமயநல்லூர் – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் ஆக.27-ம் தேதி…
கிணத்துக்கடவு அரசு பள்ளி ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்
வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ்…
ஆம்புலன்ஸ் டிரைவர்களைத் தாக்கினால் 10 ஆண்டு சிறை- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தனி நபரோ அல்லது கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும்…
திருப்புவனத்தில் கொள்ளையோ கொள்ளை- தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள் கதறல்!
முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க திருப்புவனம் வருபவர்களிடம் கட்டணக்கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் புகார்தெரிவிக்கின்றனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோயில் திருப்புவனத்தில் உள்ளது. இங்குள்ள வைகை ஆற்றங்கரையில் சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களை…