
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை மூலம் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 9ஆயிரத்து 305 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 9ஆயிரத்து 355 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.