ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?- வெளியான அதிர்ச்சி தகவல்

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்று வருமான வரித்துறையின் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

உலக நாடுகளில் தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டவர்களாக இந்தியர்கள் உள்ளனர். திருமணம், காதணி விழா, பிறந்த நாள் விழா என அத்தனை விழாக்களிலும் தங்கநகைகள் பரிசாக வழங்கப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக இது மாறியுள்ளது. ஆனால், தற்போது தங்கத்தின் விலை சவரன் 1 லட்ச ரூபாயை நெருங்கி வருவதால் ஏழை, எளிய மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், தங்கத்தை எவ்வளவு வீட்டில் வைத்திருக்கலாம் என்றும், அதற்கு வருமான வரித்துறை எத்தகைய விதிமுறைகளை வகுத்துள்ளது என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வருமான வரித்துறை அறிவுறுத்தலின்படி, இந்தியாவில் ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு எதுவும் இல்லை. அதாவது, ஒருவர் பெற்றுள்ள தங்கத்தின் மூல ஆதாரத்தை ஆவணங்களுடன் நிரூபிக்க முடிந்தால், அவர் எவ்வளவு அளவு தங்கம் வைத்திருந்தாலும் சட்டப்படி குற்றமாகாது. வாங்கிய தங்கத்திற்கு ரசீது, பரிசாக பெற்றதற்கு பரிசளிப்பு கடிதம் அல்லது பரம்பரை வழியாக வந்ததற்கு சான்றுகள் போன்ற சரியான ஆவணங்கள் இருந்தால் எந்த அளவிலான தங்கத்தையும் வீட்டில் வைத்திருக்கலாம்.

ஆனால், பலர் தங்கள் தங்கத்தின் மூல ஆதாரத்துக்கான ஆவணங்களை வைத்திருக்காமல் இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டால் சந்தேகம் எழலாம். இதனால், வருமான வரித்துறை வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, ஆவணங்கள் இல்லாத நிலையில் பாதுகாப்பான அளவு எனக் கருதப்படும் சில நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, திருமணமான பெண்கள் அதிகபட்சம் 500 கிராமும், திருமணமாகாத பெண்கள் 250 கிராமும், திருமணமான, திருமணமாகாத ஆண்கள் 100 கிராம் வரை வைத்திருந்தால், அது வழக்கமான குடும்ப நகைகள் எனக் கருதப்பட்டு வருமான வரி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படாது. ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அதற்கேற்ற அளவு ஏற்று கொள்ளப்படும்.

இந்த அளவுகளுக்கு மேல் தங்கம் இருந்தாலும், அதன் வாங்கிய மூலத்தை நிரூபிக்க முடியுமானால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் ஆவணங்கள் இல்லாமல் அதிக அளவில் தங்கம் வைத்திருந்தால், அது கணக்கிலிடப்படாத வருமானம் என கருதப்பட்டு வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இத்துடன், தங்கத்தின் வகையான நகைகள், நாணயங்கள், தங்கக் கட்டிகள் ஆகிய அனைத்தும் சேர்த்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். திருமண நகைகள், பரிசளிப்பு நகைகள் போன்றவற்றின் பதிவுகளை வைத்திருப்பது நல்லது. மொத்தத்தில் சொல்லப்போனால், ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருந்தாலும் அது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. ஆனால் அதன் மூல ஆதாரம் தெளிவாக, ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது.

Related Posts

தீபாவளி பண்டிகையால் சென்னையில் காற்று மாசு கிடுகிடு உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடியதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தீபாவளி பண்டிகை  நேற்று (அக்.20)  உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் தீபாவளியை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசு வெடித்து தீபாவளி…

இடியாய் இறங்கும் இன்றைய விலை நிலவரம்- ரூ.2,400 உயர்ந்தது தங்கம்!

சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரே நாளில் 2,400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 97,600 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *