ஏறுமுகம் காட்டும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ.400 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை மூலம் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 9ஆயிரத்து 305 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 9ஆயிரத்து 355 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

காலையிலேயே குட்நியூஸ்… கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்த…

ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?- வெளியான அதிர்ச்சி தகவல்

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்று வருமான வரித்துறையின் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. உலக நாடுகளில் தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டவர்களாக இந்தியர்கள் உள்ளனர். திருமணம், காதணி விழா, பிறந்த நாள் விழா என அத்தனை விழாக்களிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *