
ஈரோடு- செங்கோட்டை இடையேயான ரயில் சேவை ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சமயநல்லூர் – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் ஆக.27-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு நாள் தோறும் பிற்பகல் 2 மணிக்கு (6845) புறப்படும் ரயில், ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.
சமயநல்லூர்- மதுரை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திண்டுக்கல்- செங்கோட்டை இடையே இந்த ரயில் சேவை மேற்குப்பிட்ட நாட்களில் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் (6846) காலை 5.10 மணிக்குப் புறப்படும். இந்த ரயில், ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை செங்கோட்டை- திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படும்; இந்த ரயில்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.