
சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06027) இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 8.30 மணிக்கு வந்தடையும்.
அதே போல், போத்தனுரில் இருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06028) ஆகஸ்ட் 18-ம் தேதி காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். சென்னை- போத்தனூர் சிறப்பு ரயில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.