
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவர்கள் இன்று (ஆகஸ்ட் 18) முதல் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். அவர்களில் பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்வு செய்வார்கள். தற்போது ரயில் டிக்கெட் 60 நாடக்ளுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளாம்.
தீபாவளி திங்கள் கிழமை வருவதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பெரும்பாலானவர்கள் வெள்ளிக்கிழமையே அதாவது அக்டோபர் 17-ம் தேதியே ஊருக்கச் செல்வார்கள். தொடர் விடுமுறை என்பதால் ரயிலில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் முதல் முன்பதிவு செய்யலாம்.
அதன்படி, அக்டோபர் 17-ம் தேதி சொந்த ஊருக்குச் செல்ல விரும்புபவர்கள் இன்றும், அக்டோபர் 18-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளையும், அக்டோபர் 19-ம் தேதி பயணம் செய்பவர்கள் ஆகஸ்ட் 20-ம்தேதியும் முன்பதிவு செய்யலாம். மேலும், அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி அன்று பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 21-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம். முன்னதாக அக்டோபர் 16-ம் தேதி அன்று சொந்த ஊருக்குச் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புபவர்கள் ரெயில் கால அட்டவணையின்படி முன்பதிவு செய்யலாம். காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவுகளும் தொடங்குகிறது.
மேலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊரில் இருந்து அக்டோபர் 21-ம் தேதி சென்னை திரும்புபவர்கள் வருகிற 22-ம் தேதியும், அக்டோபர் 22-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 23-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 23-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 24-ம் தேதியும், அக்டோபர் 24-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் வரும் 25-ம் தேதியும், அக்டோபர் 25-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் வரும் 26-ம் தேதியும், அக்டோபர் 26-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் வரும் 27-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.